தயாரிப்பாளர்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் அனிருத்..!

aniruth-retrun-the-advance

தமிழ்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிருத் புதியதாக இசையமைக்க யார் தேடிவந்தாலும் மறுப்பே சொல்வதில்லையாம். கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக இருந்தால் இசையமைக்க ஓகே சொல்லிவிடுவார். ஆனால் அதன்பின்பு தான் அனிருத் தன்னுடைய வேலையை காட்டுவார். சொன்ன தேதியில் இவர் யாருக்கும் இசையமைத்துகொடுப்பதே இல்லையாம். ஏற்கனவே கத்தி படத்தின்போதே இதே பிரச்சனை தான் வெடித்தது. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும், இசையமைப்பதற்கும், டுயூன் பிடிப்பதற்கும் நேரத்தை ஜவ்வாக இழுத்துள்ளார் அனிருத்.

தற்பொழுது சில தயாரிப்பாளர்களை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளாராம் அனிருத். கார்த்திக் நடிக்கும் காஷ்மோரா படத்திற்கு இசையமைக்கிறேன் என அட்வான்ஸ் வாங்கிவிட்டு மூன்று மாதங்களாக ஒரு டியூன்கூட போடவில்லையாம். மேலும், படத்திற்கு இசையமைக்க முடியாது எனவும் கூறி அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுத்துள்ளார். அதேபோல் லிங்குசாமி படத்திற்கும் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுத்துள்ளார். சிங்கம்-3 படத்திற்கும் இசையமைக்க ஒப்புக்கொண்டுவிட்டு, இயக்குனர் ஹரி டியூன் கேட்தும் நேற்றைய முன்தினம் பணத்தை திருப்பிக்கொடுத்துள்ளார் அனிருத். அனிருத்தை நம்பிய மேலும் சில  தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இதே நிலைமை தானாம்.

ஆனால், அதே நேரத்தில் தனுஷ் படங்களுக்கு மட்டும் தடையில்லாமல் உடனுக்குடன் இசையமைத்து விடுகின்றாராம் அனிருத். மேலும் தனுஷ் நடிக்கும் படங்களிலும், தயாரிக்கும் படங்களிலும் அதிக கவனம் செலுத்துவதாலேயே மற்ற படங்களுக்கு இசையமைக்கமுடியாத நிலை ஏற்படுகின்றதாம். கடைசிவரை பொறுமையாக இருக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் படங்களுக்கு மட்டும் தான் இசையமைக்கின்றாராம். கேள்வி கேட்பர்களை அட்வான்ஸை கையோடுகொடுத்து அனுப்பிவிடுகிறாராம். அடிப்பதோ காப்பி, இதற்கு எதுக்கும் இம்புட்டு ஆடம்பரம் என சிலர் சாபம்விடாதா குறியாக புலம்பி தவிக்கின்றனர்.

என்ன தான் அறிமுகப்படுத்தியது தனுஷாக இருந்தாலும், அதற்காக மற்ற தயாரிப்பாளர்களை இப்படியா தெறிக்கவிடுவது?. அதற்கு ஆரம்பத்திலேயே இசையமைக்க நேரமில்லை எனத் தவிர்த்திருக்கலாமே.

Satheesh Srini

Leave a Response