பத்திரிக்கையாளரை தாக்கிய தி.மு.க’வினர் கைது! அ.தி.மு.க’வினர் ஏன் கைது செய்யப்படவில்லை!! கட்சி பாரப்பட்சமா???

Coucnillor attoack journalist
நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் காரைக்குடி செய்தியாளர் பாலமுருகன், செய்தி சேகரிக்க சென்றபோது திமுக குண்டர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையினை, அப்பகுதியின் திமுகவின் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், திமுகவின் நகரத்தலைவருமான பொரி.பாலா என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். 2 வருடகாலமாகியும் எந்தவித வரியும் செலுத்தாத நிலையில், நகராட்சி ஆணையர் 8 முறை அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். இந்த பிரச்சனை தொடர்ந்து தேவக்கோட்டை நகராட்சியில் நிலவிவருகின்றது.

இது தொடர்பான செய்தியினை சேகரிக்க, நேற்று மதியம் நியூஸ் 7 செய்தியாளர் பாலமுருகன் சென்ற போது, திமுகவின் நகரத்தலைவர் பெரி.பாலா உள்பட 7 பேர் கொண்ட குண்டர்கள் செய்தியாளர் பாலமுருகனை கடுமையாக தாக்கி நெஞ்சில் ஏறி குதித்துள்ளனர். உயிருக்கு போராடிய பாலமுருகனை, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, சென்னை வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றகோரி 23-11-2015 திங்கள் கிழமை, பொதுமக்கள் வேளச்சேரி காந்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தியை சேகரிக்க சென்ற கேப்டன் தொலைகாட்சி நிருபர் சாந்தகுமாரை அதிமுக 178-வார்டு கவுண்சிலர் எம்.ஏ.மூர்த்தி என்பவர் குண்டர்களை ஏவி விட்டு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த தொலைகாட்சி நிருபர் மீது தாக்குதல் நடத்தியதுடன் கேமராவை பறித்துள்ளார்கள்.

நெஞ்சில் மற்றும் கையில் பலத்த காயமுற்ற தொலைகாட்சி நிருபர் சாந்த குமார் சைதாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக நிருபரின் புகாரை கூட காவல்துறை பெற்றுகொள்ள மறுக்கின்றது.

இது சம்மந்தமாக சாந்தகுமாரை நாம் விசாரித்தபோது அவர் கூறியதாவது, தான் வேளச்சேரி காந்தி சாலையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த சாலை மறியலை கானொளியில் படம் பிடித்து கொண்டிருந்ததாக கூறினார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க கவுன்சிலர் திரு எம்.ஏ.மூர்த்தியின் தூண்டுதலின் பெயரில் சிலர் அவரை தாக்கி அவரிடம் இருந்த வீடியோ காமிராவை புடிங்கி சென்றதாக சொன்னார். அதுமட்டுமின்றி, சம்பவ இடத்தில் கிண்டி சட்டம் & ஒழுங்கு ஆய்வாளர் மகிமைராஜன், வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜகம் ஜெர்ரி, துணை ஆய்வாளர் தினேஷ் மற்றும் சுமார் இருபது காவல்துறையினர் இருந்ததாக தெரிவித்தார். இவ்வளவு நடந்தும் அங்கு இருந்த காவல்துறையினர் எவரும் ஒன்றும் சமாதானம் செய்யவோ அல்லது அந்த தாக்குதலை தடுக்கவோ வராமல் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக குற்றம் சாற்றுகிறார் சாந்தகுமார்.

பின்னர் சாந்தகுமார் தன்னுடைய சக பத்திரிக்கையாளர்களுடன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். காவலர்கள் புகாரை பெற்றுக்கொண்டு CSR வழங்காமல், மறுநாள்[24 நவம்பர் 2015] காலை 11:00 மணியளவில் அந்த தாக்குதல் நடத்தியவர்களை காவல் நிலையம் வரவழைத்து அவர்கள் மீது FIR போடுவதாக உறுதி அளித்துள்ளனர். காவல்துறையின் இந்த உறுதியை நம்பி சாந்தகுமார் மற்றும் சக பத்திரிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பியுள்ளனர். நேற்று மீண்டும் சாந்தகுமார் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார், ஆனால் சாந்தகுமாரை தாக்கிய அ.தி.மு.க’வினர் எவரும் அந்த காவல் நிலையத்திற்கு வரவில்லை FIR’யும் பதியப்படவில்லை என்பது தான் உண்மை என சொல்கிறார் சாந்தகுமார். இது சம்மந்தமாக வேளச்சேரியின் உதவி ஆணையாளர் நந்தகுமார் சாந்தகுமாரை தொடர்புகொண்டு, இந்த புகார் சம்மந்தமாக FIR எதுவும் போடா இயலாது என்று கூறியுள்ளார். அப்படி FIR போடுவதாக இருந்தால் இவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை உதவி ஆணையாளர் நந்தகுமார் மிரட்டுவதாக சாந்தகுமார் தெரிவித்தார்.

செய்தியாளர் சாந்தகுமார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம், மற்றும் மற்ற பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.

காரைக்குடியில் நியூஸ் 7 நிருபரை தாக்கிய தி.மு.க’வினரை காவல்துறை உடனடியாக செய்து, வேளச்சேரியில் கேப்டன் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய அ.தி.மு.க’வினரை இதுவரை கைது செய்யாதது ஏன்?

நியூஸ் 7 ஆளும் அ.தி.மு.க’வை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதும் அந்த தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர் எதிர் கட்சி தி.மு.க;வினர்!

கேப்டன் தொலைக்காட்சி எதிர் கட்சியான தே.மு.தி.க’வை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதும் அந்த தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர் ஆளும் அ.தி.மு.க’வினர்!!

தி.மு.க குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அ.தி.மு.க குற்றவாளிகளை கைது செய்யாதது கட்சி பாரப்பட்சமா?

காவல்துறை கட்சி பாரப்பட்சமின்றி, கேப்டன் தொலைக்காட்சி நிருபர் சாந்தகுமாரை தாக்கிய அ.தி.மு.க’வினர் மீது FIR பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.

ஊடகங்களின் உரிமையாளர்கள் பலதரப்பட்ட கட்சியை சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதில் பணியாற்றும் நிருபர்கள், புகைப்படக்கலைஞர்கள், காணொளி கலைஞர்கள் எந்த கட்சியையும் சாராத பணியாளர்கள் என்பதை அணைத்து கட்சியினரும், காவல்துறையினரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Leave a Response