உறுமீன் படத்திற்கு வரிவிலக்கு கிடையாது..!

urumeen-censor

பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்த ‘உறுமீன்’ படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை இழக்கின்றது இப்படம்.

பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் இப்படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தது. இவர்களின் கல்யாண அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்நிலையில் உறுமீன் திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரைக்குவர உள்ளது. காதல் ஜோடி இப்படத்தில் நடித்திருப்பதாலும், படத்திற்கு U/A கிடைத்துள்ளதாலும் படத்திற்கு சற்று எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. சக்திவேல் பெருமாள்சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்டத்தை வெளியிடுகிறது.

Satheesh Srini

Leave a Response