ராஜாவா? ரகுமானா? மோதலில் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா..!

prakashraj-prabhudeva

நடிகராக புகழ்பெற்று இயக்குனராக பாலிவுட்டில் உச்சம் தொட்டவர் பிரபுதேவா. இவர் தயாரிப்பாளராகவும் புகழ்பெற வேண்டும் என பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சில மாதங்கள் முன் துவங்கினார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரபுதேவா மட்டும் உரிமையாளர் இல்லையாம், அது ஐசரி கணேசனின் பினாமி நிறுவனமாக துவங்கப்பட்டதாக தகவல். இந்நிறுவனம் துவக்கம் அன்றே இரண்டு படங்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. அதில் ஒன்றுதான் பிரகாஷ்ராஜ்யை ஹீரோவாக வைத்து பிரியதர்ஷன் இயக்கும் படம். முதல்கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலமையாகிவிடும் போல் உள்ளது இந்த படம்.

பிரகாஷ்ராஜ் தோனி படம் முதல் சமீபகாலமாக தான் தயாரிக்கும் படங்களுக்கு இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த படத்திற்கும் அவரையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என நினைத்தபோது தான், பிரபுதேவா சொல்லாமல் கொள்ளாமல் ஏ.ஆர்.ரகுமானை புக் செய்துவிட்டாராம். ரகுமானிடம் நேரடியாக சென்று கலந்துபேசிவிட்டு பைனல் பண்ணிய பின்புதான் பிரகாஷ்ராஜிடம் சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ்ராஜ் என்னுடைய படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இசையமைப்பாளரை முடிவு செய்யவேண்டியது ஹீரோ அல்ல, இயக்குனரும் தயாரிப்பாளரும் தான். ரகுமானை ஆல்ரெடி புக் பண்ணியாச்சு மாற்றம் ஏதுமில்லை என பிரபுதேவா கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

தற்பொழுது படம் அடுத்த கட்டத்திற்கு போகுமா? அல்லது பாதியிலேயே ட்ராப் செய்யப்படுமா? என கேள்விக்குறியாகியுள்ளது.

satheesh srini

Leave a Response