ஜனவரி-1௦ல் ‘லிங்கா’ பட நஷ்ட ஈடு கோரி விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம்..!

பேராசை பெருநஷ்டம் என்பது விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ‘லிங்கா’ படத்தின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. 45 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் லிங்காவை கிட்டத்தட்ட 22௦ கோடிக்கு விற்று லாபம் பார்க்க நினைத்தால் பின்னர் அது பேராசை இல்லாமல் வேறு என்னவாம்..?

ஏற்கனவே லிங்கா படத்தினால் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறி தங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் கலெக்ஷன் கூடும் வாய்ப்பு இருக்கிறது, அதனால் பொறுமையாக இருங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் எதிர்பார்த்தபடி கலெக்ஷனும் ஏறவில்லை. தயாரிப்பாளர் தரப்பும் நஷ்டஈடு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்கவில்லை. அதனால் வரும் ஜனவரி-1௦ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் லிங்கா’வினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டஈடு கோரி உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாம்.