காமெடிக்கு 1௦௦% கியாரண்டி தரும் அருள்நிதி பட ட்ரெய்லர்..!

‘தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என மீடியம் ஹிட்டுகளை கொடுத்த கையோடு ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார் அருள்நிதி. இந்தப்படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது..

ட்ரெய்லரை பார்க்கும்போதே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பது தெளிவாக தெரிகிறது. அருள்நிதி இந்தப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். கூடவே காமெடிக்கு சிங்கம் புலியும், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பகவதி பெருமாளும் கூட்டணி அமைத்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். லியோ விஷன் ராஜ்குமார் மற்றும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம், அருள்நிதியின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்..