நண்பர்களை மோதவைக்கும் நட்சத்திர பேட்மிண்டன்..!

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும், ஏன்.. பரத்தும் கூட  இப்போது ஒருவகையில் எதிரிகளாகி விட்டார்கள்.. காரணம் என்னவென்று அறியவேண்டுமா..? கவனமாக படியுங்கள்.. நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக  இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன்.

க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்’ (Star’s Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இதன் அறிமுகவிழா சென்னை போரம் விஜயா மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்’   அணியின் உரிமையாளர்  ஸ்ரீகாந்த்,  ‘சென்னை ஸ்மாஷர்ஸ்’ உரிமையாளர் பரத், முன்றாவது அணியான ‘சென்னை ராக்கெட்ஸ்’  (Chennai Racquets) அணியைச் சேர்ந்த ஷாம் மூவரும் மொன்று அணிகளுக்கு தலைவர்களாக மாறிவிட்டதால் மூவருமே எதிரிகளைப்போல மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது..(அட.. விளையாட்டுக்குத்தாங்க)

இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷ் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார்.  சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். இப்போது இதோ நட்சத்திர பேட்மிண்டநில் களம் இறங்கியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டிஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அறிமுகம் செய்யப் பட்டது. இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரியில்  சென்னை போரம் விஜயா மாலில் நடைபெறவுள்ளது.