செல்போன் திருடர்கள் பற்றி என்ன சொல்லுது இந்த அல்டி! திரை விமர்சனம்

குட்டி, குணா, ஜானி மூவரும் நண்பர்கள். உழைத்து சம்பாதிக்கும் திறமை இல்லாத இவர்கள் செல்போன்களை திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஊர் சுற்றி ஜாலியாக வாழ்ந்து வந்தனர்.

சாதாரண செல்போன்களை திருடி வந்த இவர்களுக்கு ஐ போன் பற்றிய மதிப்பும் விளையும் தெரிய அதை பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். ஒருநாள் இரவு, குணாவின் கையில் எம் எல் ஏ மாரிமுத்து மகனின் ஐ-போன் ஒன்று கிடைக்கிறது, அந்த ஐ போன் கிடைத்தவுடன் அவர்களுக்கு வருமானம் வந்ததா இல்லையா என்பதைவிட அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான் மீதி கதையே.

எம்.எல்.ஏ’வாக வரும் மாரிமுத்துவின் மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். செல்போனை திருடிய குணா போலீசில் சிக்குகிறார். ஆனால் அவரிடம் செல்போன் இல்லை என்பதை அறிந்த இன்ஸ்பெக்டர் ராபர்ட் குணாவை கொலை செய்து விடுகிறார். எம்.எல்.ஏ மகன் கோழி குற்றவாளிகளை தேடுவதை விட, அவனுடைய ஐ-போனை தேடும் முயற்சியை கைவிடாமல் தேடி வருகிறார் இன்ஸ்பெக்டர் ராபர்ட்.

போலீஸ் ஒரு புறம் கொலை குற்றவாளியை தேடி வந்தாலும், தனது மகனை கொலை செய்தவனை தேடும் முயற்சியில் இறங்குகிறார் எம்.எல்.ஏ மாரிமுத்து.

கொலை குற்றவாளிகள் பிடிப்படுகிறார்களா? எம்.எல்.ஏ மகன் கொலைக்கான காரணம் என்ன??
இன்ஸ்பெக்டர் ராபர்ட் தொடர்ந்து அந்த ஐ போனை தேடி வருவதற்கான காரணம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

திரைப்படத்தின் நாயகனாக அன்பு மயில்சாமி மற்றும் அவருடன் நண்பர்களாக செண்ட்றாயன், யாசர் நடித்துள்ளனர். செண்ட்றாயன், யாசர் ஆகிய இருவரின் நடிப்பும், கதாநாயகன் அன்பு மயில்சாமியின் சுமார் நடிப்புக்கு கை கொடுத்துள்ளது .

எப்போதும் போல் தங்களையடைய எதார்த்த நடிப்பில் மாரிமுத்து மற்றும் ஏ.வெங்கடேஷ் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். படத்தின் நாயகியாக வரும் மனிஷாஜித் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நேர்த்தியாக நடித்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக வரும் ராபர்ட் மாஸ்டர், நடிப்பில் வேறு ஒரு தளத்தை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் வந்து பார்வையாளர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பின் அடையாளத்தை பதிவு செய்துள்ளார் இன்ஸ்பெக்டராக வரும் ராபர்ட்.

இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட சில ட்விஸ்ட் காட்சிகள், கதைக்கு பலம் சேர்த்துள்ளது. அறிமுக இயக்குனர் உசேனின் வித்யாசமான கதையின் முயற்சிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

ஸ்ரீகாந்த் இசையில் வரும் இரண்டு பாடல்கள் எப்போதும் போல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அதிக சத்தமின்றி, பின்னனி இசை கதையோடு பயணம் செயகிறது.

Leave a Response