‘ஆ’ என ஆச்சர்யம் தரும் வெற்றியில் ‘ஆ’ கூட்டணி..!

உலக தரத்துக்கு இணையாக அம்புலி 3டி படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை  ஈர்த்த இரட்டையர் இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் ஷங்கர் மீண்டும் இணைந்து இயக்கும் படம் தான் ‘ஆ’. அம்புலி’ படத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரித்துள்ளது.

‘அம்புலி’ படம் எடுத்தபோதே அடுத்து இன்னொரு படத்திலும் இணையவேண்டும் என அதன் தயாரிப்பாளரும் இயக்குனர்களும் முடிவு பண்ணி இன்று ‘ஆ’வின் மூலம் வெற்றியை சந்தித்து உற்சாக கொண்டாட்டம் நடத்துகிறார்கள்..

முதல் படத்தில் முகம் மறைக்கப்பட்ட கோகுல்நாத்திற்கு இந்தப்படம் ஹீரோவாக முகவரி தந்துள்ளது உண்மை.. இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஹாலிவுட் படங்களைப்போல தமிழிலும் படங்களை தர முயற்சி செய்கிறார்கள் என இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இருவரையும் பாராட்டினார் பாஸ்கி.