சமுத்திரக்கனியின் வில்லத்தனம் சிவகார்த்திகேயனிடம் எடுபடுமா..?

ஆக, இயக்குனர் சமுத்திரகனியை படம் இயக்கவே விடமாட்டார்கள் போல இருக்கிறதே.. அதற்கேற்ற மாதிரி தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பா கேரக்டரில் அவரது நடிப்பு அருமையாக இருப்பதாக சொல்லி பாராட்டுக்கள் வேறு குவிகின்றன.

இனி தொடர்ந்து வாய்ப்புகள் தேடிவரத்தானே செய்யும். சரி நடிக்கட்டும்.. ஆனால் குணச்சித்திர நடிகராக, தன்னம்பிக்கை தரும் கதாபாத்திரங்களில் நடித்த சமுத்திரகனி, மீண்டும் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தமாதிரி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்க, பொன்ராம் இயக்கும் படத்தில் தான் அவருக்கு இந்த வில்லன் வேடம்.. சமுத்திரகனி எது பண்ணினாலும் சரியாகத்தான் பண்ணுவார்.