ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். யாராலும் மறக்க முடியாத இவர் பெயரில் தற்போது ஒரு படம் தயாராகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். படத்திற்கு இன்னொரு பலமாக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் சந்தானம்.
விஜய்ஆண்டனி இசையமைக்கும் இந்தப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் சந்தானம். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அறிவியல் களம் சார்ந்த, ஆனால் முழுக்க முழுக்க காமெடி படமாக ‘நம்பியார்’ உருவாகியுள்ளது.
இன்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, ஸ்ரீகாந்த், அமீர், பார்த்திபன், கரு.பழனியப்பன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.