ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், ஸ்பெயின் என பல நாடுகளில் படமாக்கவிற்கும் பிரஷாந்த் நடிக்கும் “சாஹாசம்”:

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பொன்னர் சங்கர், மம்பட்டியான், ஆகிய படங்களை அடுத்து பிரசாந்த் சாஹசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்கி டெல்லி, மும்பாய், சென்னை நகரங்களில் நடந்து வருகிறது.வெகு வேகமாக வளரும் சாஹசம் படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் ஒரு முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் தங்கையாக லீமாவும், மற்றும் தம்பி ராமையா, எஸ்.எஸ்.பாஸ்கர்,தேவதர்ஷினி, மலேசியா அபிதா, ஸ்வாமிநாதன், சோனு சூது,கோட்டா சீனிவாசராவ், ராவ் ரமேஷ் மற்றும் பல நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளம் நிறைந்த காட்சிகள் சாஹசம் படத்திற்காக படமாக்கப்பட்டது.
Prashanth-Nargis-Fakhri-
தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், ஸ்பெயின், அயர்லாந்த், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் கதை திரைக்கதை திரு.விக்ரம் எழுதி ரகளபுரம் இயக்குனர் மனோகர் வசனம் எழுதுகிறார். கலை பொறுப்பை மிலன் ஏற்க தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அருண் ராஜ்வர்மா எனும் புதிய இயக்குனர் சாஹசம் படத்தின் மூலம் இயக்குனராக நடிகர் தியாகராஜன் அறிமுகம் செய்கிறார். இவர் இயக்குனர் மேஜர் ரவியிடம் உதவி டைரக்டராக பல படங்களுக்கு இருந்தவர். ஸ்டார் மூவிஸ் சார்ப்பில் நடிகர் தியாகராஜன் மிகுந்த பொருட்செலவில் சாஹசம் படத்தை தயாரிக்கிறார்.
IMG (8)
தற்போது ஸ்பை எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நர்கீஸ் பக்ரி, பிரசாந்துடன் இணைந்து சாஹசம் படத்திற்காக விசேஷ பாடல் காட்சியில் நடனமாடயுள்ளார். இவர் ஏற்கனவே ரண்பீர் கப்பூருடன் ராக்ஸ்டார், ஜான் ஆப்ரஹாமுடன் மெட்ராஸ் கபே, ஷாகித் கப்பூருடன் பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ, வருனுடன் மேன் தேரா ஹீரோ ஆகிய பிரபலமான சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது தெரிந்ததே. இந்த பாடல் காட்சியை பிரபலமான நடன இயக்குனர் செய்யவுள்ளார். இந்த நடன காட்சிக்காக பிரம்மாண்டமான செட்டுகள் போட பட உள்ளது. பிரசாந்தின் சாஹசத்தை வெளிப்படுத்தும் இந்த நடன படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.