ராஜபக்சவை கண்டித்து டெல்லியில் வைகோ கருப்புக்கொடி அறப்போர்:

நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவிற்காக ராஜபக்ச டெல்லி வந்துள்ளார்.

ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, இன்று காலை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன் கட்சியை சேர்ந்த சில உறுபினர்களுடன் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினார்.