நரேந்திர மோடியையும் முதல்வர் ஜெயலலிதாவையும் வாழ்த்தும் நடிகர் விஜய்’க்கு பத்திரிக்கை அறிக்கையில் கையொப்பமிட தெரியாதா?:

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில், இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி 320 இடங்களுக்கு மேலாக முன்னிலையில் உள்ளது, தமிழகத்தில் அ.தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இவ்விறு கட்சிகளின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளதாக அவருடைய பி.ஆர்.ஒ, பி.டி.செல்வகுமார் மூலமாக குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு மட்டும் நடிகர் விஜய்’யின் கையொப்பம் இல்லாத செய்தி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கையொப்பம் இல்லாத நடிகர் விஜய்’யின் அறிக்கையின் நகல் கீழே உங்கள் பார்வைக்காக.
Vijay arikkai
இந்த வகையான விஜய்’யின் கையொப்பம் இல்லாத அறிக்கை இது முதல் முறை அல்ல. ஒரு பிரபல நடிகர், கட்சி நடத்த விரும்பும் ஒருவர், ஒரு பத்திரிக்கை செய்தியை அனுப்பும் பொழுது அதில் கையொப்பம்மிட்டு அனுப்பவேண்டும் என்பது தெரியாதா, அல்லது உங்களுக்காக உங்கள் பி.ஆர்.ஒ, பி.டி.செல்வகுமார் அவராகவே ஒரு செய்தி அறிக்கையை அனுப்புகிறாரா?

அப்படி உங்கள் அனுமதியோடு உங்கள் பி.ஆர்.ஒ இவ்வகையான கையொப்பம் இல்லாத பத்திரிக்கை செய்தியை அனுப்பியிருந்தால், அது உங்களுடைய பொறுப்பின்மையை மட்டுமே குறிப்பிடுகிறது.

என்ன சொல்றீங்க விஜய் சார். இனி வரும் காலங்களில் இத்தகைய தவறுகளை தவிர்த்து, சற்று விவரம் தெரிந்தவர்களை உங்கள் அருகில் அமர்திக்கொண்டால் உங்களுக்கு எப்போவுமே பிளஸ்.