முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி! – வைகோ:

தமிழகத்திற்கு அருகிலும் கேரளா மாநிலத்தின் தேக்கடி, இடுக்கி மாவட்டத்தில் பெரியார் ஆற்றின் மீது அமைந்துள்ளது “முல்லை பெரியார் ஆணை”. 1887 முதல் 1895’குள் கர்னல் ஜான் பென்னி கூக் என்பவரால் கட்டப்பட்டது. கேரள அரசின் ஆனவப்போகினால், இந்த அணையில் நீர் தேக்கும் அளவில் நீண்ட வருடங்களாக சர்ச்சை இருந்து கொண்டிருந்தது. அணையில் குறைவான நீர் தேகத்தினால், தமிழகத்திற்கு நீர் வரவு மிகவும் குறைவாகவும் பல நேரங்களில் இல்லாமலும் இருந்துள்ளது.
John_Pennycuick
தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி, பின்னர் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட்டது. முல்லை பெரியார் ஆணை நீர் தேக்க அளவின் சர்ச்சை இன்று உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் வாயிலாக முடிவுக்கு வந்தது. உச்ச நீதிமன்றம், “முல்லை பெரியார் அணையில்” 142 அடி வரை நீர் தேக்கலாம் என அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என வைகோ அவருடைய பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.
29dam1
வைகோ’வின் பத்திரிக்கை செய்தி கீழே:

வைகோ வரவேற்பு; விழா கொண்டாட வேண்டுகோள்!

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று தந்த மகத்தான தீர்ப்பால், கேரளத்தின் அராஜகப் போக்குக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் உரிமையும், நீதியும் பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று தந்த தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும், அணையை உடைப்பதற்கும் உரிமை உண்டு என்றும், கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விடப்பட்ட பகிரங்கமான சவால் ஆகும்.

கேரளத்தின் அராஜகப் போக்கைத் தடுக்கும் கடமையில், கேரள அதிகாரிகள் ஆட்டிப் படைத்து சோனியா காந்தி இயக்கிய காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறியது; தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைத்தது; இந்திய இறையாண்மைக்கும் கேடு செய்தது.

ஆனால் இன்று உச்சநீதிமன்றம், கேரளம் நிறைவேற்றிய சட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது, இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் நம்பிக்கையைத் தந்து உள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 33 வாய்தாக்கள் இழுத்தடிக்கப்பட்டதற்குக் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. அரசே காரணம் ஆகும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தமிழகத்திற்கு நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வர இருந்த வேளையில், வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றச் சொல்லிக் கேரள அரசு, சூழ்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கு கருணாநிதி அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; எழுத்து மூலமாக இசைவும் தந்தது. அதனால், தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நீதியை இழந்து விடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது.

கேரள அரசும், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கு முழுமூச்சாக முயன்றன. அதைத் தடுக்க நாம் கடுமையாகப் போராடினோம்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக்கம் சேகர், சின்னமனூர் இராமமூர்த்தி ஆகிய மூவரும் முலலைப்பெரியாறைக் காக்கத் தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். கேரளத்தின் அநீதியைத் தடுக்க அனைத்துச் சாலைகளையும் மறித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கொந்தளித்தது.

இன்றைய தீர்ப்பு மிகுந்த நிம்மதியைத் தந்து உள்ளது. கேரளத்தின் சதித்திட்டம் தகர்ந்தது.

இதற்குப் பின்னரும், கேரளத்தில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்வதும், சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லி, அச்சுதானந்தன் சகுனியாக ஆலோசனை சொல்வதும் சகிக்கிக் கூடியது அல்ல.

கேரளச் சட்டமன்றம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுமானால், கேரள அரசை டிÞமிÞ செய்து, சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பவன் நான். ஆனால், ஒன்றுபட்ட இந்தியாவில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இருப்பதால், நாம் நேரடியாகக் கேரளத்தோடு எதிர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்பதால், கேரள அரசைக் கலைக்க வேண்டுகிறேன்.

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் சரியான அணுகுமுறையைக் கையாண்ட தமிழக அரசு, உடனடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குப் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைக்குத் தமிழக மக்கள் ஒன்றுபட்டுத் தோள் கொடுப்போம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுத் தமிழக மக்கள் தைப்பொங்கல் விழாவை நடத்துவது போல் கொண்டாட வேண்டுகிறேன்!