புத்தக வெளியீட்டு விழா : சென்னை நினைவுகளை பகிர்ந்து கொண்ட தோனி..!

சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தோனி தென் இந்தியாவோடு தனக்குள்ள உறவைப்பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான சீனிவாசன் கிரிக்கெட் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். ஐ.சி.சி. யின் தலைவராக இருந்த இவர் சிலபல குற்றசாட்டுகளால் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் இவர் சென்னை அணி சூதாட்டப் புகாரில் சிக்கி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனாலும் கிரிகெட் மீது உள்ள ஆசையால் சென்னை அணியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய, Defying the Paradigm என்ற ஆங்கிலப் புத்தகம் நேற்று (டிசம்பர் 28) சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது. புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தோனி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சி.எஸ்.கே வைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட தோனி ‘.நானும்,சி.எஸ்.கே.வும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும்போது சினிவாசன் பல விஷயத்தில் எனக்கும் அணிக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறார்.சென்னை எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நிதானத்தையும் நேர்மையையும் சென்னையும், ரசிகர்களுமே எனக்குக் கற்றுக் கொடுத்தனர்’ எனக் கூறினார்.

சீனிவாசனைப் பற்றியப் புத்தகம் என்பதால் சிஎஸ்கே சூதாட்ட சர்ச்சைகள் மற்றும் ஐசிசி தலைவராக அவர் பணியாற்ரிய போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Response