ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநளுக்கு உள்ளது-ஆளுநர் பன்வாரிலால் அறிக்கை..!

மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லுக்கு ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை எறிந்தும் போராடினர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்..

அவர் தனது அறிக்கையில், மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநருக்கு மாநிலத்தில் ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. அதையும் மீறி ஆய்வு செய்தால் திமுகவின் போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை இரண்டாவது விளக்கம் அளித்துள்ளது.மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்ட வல்லுநர் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின், ஆளுநருக்கு ஒரு மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை. இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது.

ஏற்கனவே ஆளுநர் அளித்த அறிக்கையில் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருந்தார்.

Leave a Response