இனி நீட், ஐஏஎஸ் என எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் ஆக இருக்கணும்-அமைச்சர் செங்கோட்டையன்..!

நீட் தேர்வுகளுக்கு அரசின் சார்பில் அளிக்கபபடும் பயிற்சி மேம்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கோண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

உயர்கல்வியின் வளர்ச்சி 14 சதவீதமாக முன்பு இருந்தது. தற்போது 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் அரசு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தாண்டு 1,6,9,11-ம் வகுப்புகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர் என தெரிவித்தார்..

அடுத்த வாரம் முதல் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ‘நீட்’ தேர்வுக்கான 40 சதவீத கேள்விகள் புதிய பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 5,200 அரசுப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது எனவும் செங்கோட்டையின் தெரிவித்தார்..

பிளஸ்-2 படித்து கொண்டிருக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பிரிவில் சேர பயிற்சி கொடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம் என்றும் அவர் கூறினார்.தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஐஎஎஸ், ஐபிஎஸ், நீட் என அனைத்து தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பட்டைய கிளப்புவார்கள் என்றும் இனி ஐஏஎஸ், நீட் என அனைததுத் தேர்வுகளிலும் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடிக்கும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Response