ஸ்டெர்லைட் விவகாரம்:தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம்-வைகோ குற்றச்சாட்டு..!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை கண்துடைப்பு நாடகம், என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

வைகோ கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துாத்துக்குடி மக்களை ஏமாற்றுகின்ற, கண்துடைப்பு நாடகமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இது நீதிமன்றத்தில் தோற்றுப்போய்விடும். அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்ற தலைவர்களிடமும் ஆலோசித்து சட்டசபையில் ஒரு மசோதா கொண்டுவந்து ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தால் வலுவாக இருக்கும்.துாத்துக்குடி சம்பவத்திற்கு தனி நபர் கமிஷன் கண்துடைப்பு. எதிர்ப்பாளர்களை சுட்டு பொசுக்கினால், ஆலை பக்கம் வரமாட்டார்கள் என சுட்டுக் கொன்றனர். ‘நீட்’டால் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ‘நீட்’டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை, கிராமத்து மாணவர்கள் டாக்டர் ஆக முடியாது. ‘நீட்’ குறித்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குப்பையில் கிடக்கிறது, என்றார்.

Leave a Response