நச்சரித்தும் கிடைக்காத அமைச்சர் பதவி : கோபத்தில் திமுக பக்கம் தாவுகிறாரா கருணாஸ்?

திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா இன்னும் ஒரு வாரம், மருத்துவமனைக்குப் போகாமலிருந்தால் நான் அமைச்சராகியிருப்பேன் என சொல்லி பலத்த பரபரப்பை உருவாக்கியிருந்தார் கருணாஸ். இதற்கு ஒரு பின்னணி உண்டு என்கிறார்கள் அதிமுகவினர்.

ஜெ மறைவுக்குப் பிறகு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியின் பெரும்பான்மைக்கு கேள்விக்குறி உருவானது. இந்த நிலையில், இதனை பயன்படுத்தி, தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனவும், அம்மா ஒரு முறை என்னிடம், நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டமன்றத்தை கூட்டவிருக்கிறேன். அப்போது நீ அமைச்சராக இருப்பாய் ‘ என சொன்னார்கள். அதனால், இப்போது நீங்கள் என்னை அமைச்சராக்க வேண்டும்.

இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளை பல அமைச்சர்கள் வைத்திருக்கிறார்கள். அதை மாற்றியமையுங்கள் என வலியுறுத்தி அமைச்சர் பதவிக்கேட்டு நச்சரித்துள்ளார் கருணாஸ்.

அதற்கு வாய்ப்பில்லை என்பதை தெளிவாக மறுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. கருணாசின் இந்த வற்புறுத்தல் பல முறை நடந்தும், அதற்கு உடன்படவில்லை முதல்வர் எடப்பாடியார்.

இந்த கோபத்தில்தான், திமுக ஆதரவு நிலையை எடுத்து சமீபகாலமாக நடந்துகொண்டு வருகிறார் அவர். அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் மாதிரி சட்டசபையில் அவருடைய பேச்சாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைப் போல தன் மீது எடுக்க எடப்பாடி துணியமாட்டார் என நினைத்துத்தான் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய் பேச ஆரம்பித்துள்ளார் என விவரிக்கின்றனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.

Leave a Response