உச்சநீதிமன்றம்: தமிழக அரசின் கருத்து: அமைச்சர் சிவி சண்முகம்…

காவிரி தொடர்பான வழக்கில் இரண்டு வாய்தாக்களை பெற்ற பின் மத்திய அரசு இன்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பாக பதிலளிக்க தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி வாரியமா, குழுவா,ஆணையமா என பெயர் வைப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை.

காவிரி வரைவு திட்ட நகல் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது. வரைவு திட்டத்தில் நிறை, குறைகளை ஆராய்ந்த பின்னர் மே.19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும். தமிழகத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும்.

177.25 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

Leave a Response