காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Mettur_155555

Mettur_155555

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு தலைவர் அனுமதிக்க கூடாது,
பி.ஆர்.பாண்டியன்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீரை குறைந்து வழங்கியதால் பெரும் பாதிப்பு ஏற்படும். தற்ப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ONGC யின் பேரழிவு திட்டங்களால் நிலத்தடி நீர் பறிபோனது. குடிநீரின்றி பறிதவித்து வரும் நிலையில் கொள்ளிடம், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தான் சென்னை உட்பட 10 மாநகராட்சிகளை உள்ளடக்கியதஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் குடிநீர் பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம் 20 டிஎம்சி நிலத்தடி நீரை பயன்படு தப்படுவதாக கூறி நடுவர் மன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சியில்
14. 25 டிஎம்சி தண்ணீரை குறைத்திருப்பது வேதனையளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அவ்வமைப்பு தமிழகத்தின் பாதிப்பினையும், தண்ணீர் பற்றாக்குறையையும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண முடியும். எனவே தண்ணீர் குறைப்பிற்க்காக தமிழகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்துவதையும், விமர்சிப்பதையும் கர்நாடக, மத்திய அரசுகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தீர்ப்பை அவமதிப்பதற்க்கும், முடக்குவதற்க்கும் ‘ மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுப்பதற்க்கும், காலம் கடத்துவதற்கும் இடமளித்து விடக் கூடாது. உச்ச நீதிமன்ற தீப்பினை அவமதிக்கும் நோக்கோடும், கலங்கம் கற்ப்பிக்கும் வகையில் மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பகிரங்கமாக பேசியிருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இது தான் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழிக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் முறனானது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சித்தராமய்யாவின் கருத்து தேர்தல் நடத்தை விதி மீறளும் ஆகும். இதனை குடியரசு தலைவரும், தேர்தல் ஆணையமும் அனுமதிக்க கூடாது. சித்தராமையா மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறும் அரசியல் கட்சிகள், ஆட்சிகள் எதுவாக இருந்தாலும் உரிய கண்டனத்தையும், எச்சறிக்கையையும் தெரிவிக்க வேண்டும். மீறும் பட்சத்தில் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை கருதி உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும். மேலும் நீதிமன்ற உத்திரவு படி மேலாண்மை வாரியம் 6 வாரக்காலத்திற்குள் அமைப்பதை குடியரசு தலைவர் மாளிகை அவசர நடவடிக்கை எடுத்து உறுதி படுத்துவதோடு,அது குறித்து சம்பந்தப்பட்ட மாநில விவசாயிகளுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டாவில் 5லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகி வரும் நிலையில் பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசு தலைவருக்கு எடுத்துரைத்து விரைந்து நடவடிக்கை மேற்க்கொண்டு மேலாண்மை வாரியம் அமைத்திடவும், உரிய தண்ணீரை பெற்றிடவும் வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். உடன் தஞ்சை மண்டல தலைவர் டிபி கே.இராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *