3 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் அறிவிப்பைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு முன்னதாக, கடந்த 15, 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Response