சென்னையில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி மரணம்:

சென்னை நொளம்புரில் வசிப்பவர் ஜே.அருள்தாஸ், ஆண், வயது 55. இவர் கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில், பிளாட்பாரத்தில் மீன் வியாபாரம் செய்பவர்.

இன்று 21 நவம்பர் 2018 மதியம் சுமார் 02:30 மணியளவில் அருள்தாஸ், நெற்குன்றம் பால்வாடி தெரு வழியாக தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மின்சார கம்பி அவர் மீது அறுந்து விழுந்தது. மின்சாரம் தாக்கி விபத்தில் சிக்கிய அருள்தாஸ் உடனடியாக ஆட்டோவில் கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அருள்தாசை பரிசோதித்த மருத்துவர்கள் அருள்தாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அருள்தாசின் பூத உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்துவிட்டார். மனைவி மேகலா வயது 53. வாரிசுகள்: 3 பெண் பிள்ளைகள். மூத்த மகள் அம்மு(திருமணம் ஆகாதவர்) வயது 31, இரண்டாவது மகள் அமலா(திருமணம் ஆகியவர்) வயது 29, மூன்றாவது மகள் அருணா வயது 24 உள்ளனர். இந்த விபத்து குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்த அருள்தாசுக்கு மனைவி மேகலா 53 வயது மற்றும் அம்மு 31 வயது, அமலா 29 வயது, அருணா 24 வயது என மூன்று மகள்கள் உள்ளனர். மகள்களில் ஒருவரான அமலா திருமணமாகி தன்னுடைய குடும்பத்துடன் நெற்குன்றத்தில் வசித்து வருகிறார்.

Leave a Response