கறுப்பு பேட்ஜ் அணிந்து இன்ஸ்பெக்டர் உடலுக்கு சென்னையில் ஆஞ்சலி!

-periapandi43534

கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை பிடிக்க சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்டோர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்தனர்.

நேற்று அதிகாலை கொள்ளையர்கள் பதுங்கியிருந்த பாலி மாவட்டம் ராம்புரா கிராமத்தில் தமிழக தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். நாதுராமை கையும் களவுமாக பிடித்து போலீசார் அவர்களின் கார் அருகே இழுத்து வந்தனர்.

அப்போது நாதுராமின் உறவினர்கள் தமிழக போலீசாரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி நாதுராம் சரமாரியாக சுட்டுள்ளார்.

periyapandi-policedemands21.jpg.pagespeed.ic_.eBN4NZDaQo-600x400

இதில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

காலை 8 மணிக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து பெரிய பாண்டியின் உடல் தனி விமானம் மூலம் புறப்பட்டது. பகல் 12 மணிக்கு பெரியபாண்டியின் உடல் சென்னையை வந்தடைந்தது.

periyaperiya1

 

விமான நிலையத்திலேயே அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோ தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மற்றும் காவலர்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

edapadi-periyapandi-5

இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் பெரியபாண்டியின் உடல் மதுரை கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக பெரியபாண்டியின் உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான சாலைபுதூரில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

 

Leave a Response