மாநில அரசுக்கும், நடக்கும் வருமான வரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லங்க! கடம்பூர் ராஜூ வான்டட் ஸ்டேட்மன்ட்!

raju45-600
தமிழகத்தில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணினார். அவரது எண்ணப்படி தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இதுவரை 22 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

மேலும், எம்.ஜி.ஆரின் சாதனைகள், பெருமைகளை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள அவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக திரைப்படம் எடுக்கும் பணியை ரமணா பிக்ஸர்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பணி செய்கின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் கூட வருமானவரிச் சோதனை நடைபெற்றது. அவர் ஐந்து, ஆறு முறை விசாரணைக்குச் சென்று ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்களின் விசாரணை வெளிப்படையானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response