தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் வீடு மற்றும் அலவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிஎஸ் வரி குழுவினார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவர் 51 லட்சம் வரி செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இது தொடர்பான விசாரணைக்கு கணக்கு புத்தகங்களுடன் ஆஜராகுமாறு விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இதன் அடிப்படையில் நேற்று வருமானவரித்துறை அலுவலகத்தில் விஷால் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது ஆடிட்டர் ஸ்ரீதர் ஆஜரானார். அவருடன் விஷால் பிலிம் பேக்டரி அலுவலர்களும் உடன் சென்றனர்.
அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஆடிட்டர் உரிய கணக்கு ஆவணங்களையும் ஒப்படைத்தார். வரிபாக்கி 51 லட்சத்தை கட்டத் தயாராக இருப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு வருமானவரித் துறையினர் சம்மதம் தெரிவித்தனர். வரிபாக்கியை 3 தவணையாக கட்ட முடிவு செய்துள்ளனர்.