மின்சாரம் திருட்டு, நடிகர் சந்தானம் அபராதம் செலுத்தினார்:

தமிழ் திரையுலகத்தில் வடிவேலுவின் ஓய்வுக்கு பிறகு, நகைச்சுவை நடிகராக சற்று பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை சாலிகிராமத்தில் குடியிருக்கிறார். தன் இல்லத்தின் ஒரு பகுதியை தன்னுடைய அலுவலகமாக அமைத்துள்ளார்.

சாதாரணமாக மின்சார இணைப்பில் பல வகைகள் உண்டு. அவை 1. வீட்டு உபயோகம், 2. வணிக உபயோகம், 3. விவசாய உபயோகம், 4. குறைந்த அழுத்த உபயோகம், 5. உயர் அழுத்த உபயோகம் என வகைப்படும்.

சந்தானம் தான் வசிக்கும் வீட்டிற்க்கும், தான் செய்யும் தொழிலுக்கான அலுவலகத்திற்கும் வீட்டு உபயோக மின்சார இணைப்பையே உபயோகித்து கொண்டிருந்தார். வர்த்தக உபயோகத்திற்கு வீட்டு உபயோக மின்சாரத்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சில தினங்களுக்கு முன்பு சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்னும் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடைப்பெற்றது. அந்த விழாவிற்கு தமிழ் திரையுலகத்தில் இருந்து செல்வாக்குமிக்கவர்கள் என்னும் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் தவிர வேறு எவரும் இல்லை. மேடையில் பேசிய சந்தானம் சற்று ஆணவத்துடன், தான் யாரையும் நேராக அழைக்கவில்லை, என் அழைப்பிதழை பார்த்து என் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டும் வந்துள்ளனர். பிரபலமானவர்களை அழைத்து என் விழாவை கவுரவப்படுத்த தான் விரும்பவில்லை என்று சற்று ஆணவத்துடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
IMG_8736
சந்தானத்தின் இந்த மின்சார திருட்டை பற்றி சந்தானத்திற்கு ஆவாத எவரோ ஒருவர் மின்சார துறைக்கு புகார் செய்துள்ளனர். 16 மார்ச் 2014 அன்று மின்வாரிய துறையின் மின் திருட்டு ஆய்வு பிரிவினரால் சந்தானத்தின் வீடு மற்றும் அங்கு அமைந்துள்ள சந்தானத்தின் அலுவலகத்தை ஆய்வாளர்கள் சோதனையிட்டனர்.

சோதனையில் சந்தானம் தன் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தை தன் அலுவலகத்திற்கு உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் உடனடியாக சந்தானம் வீட்டின் மின்சாரத்தை துண்டித்தனர். இப்படி மின்சார திருட்டில் சிக்குபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் அல்லது, மின்சார உபயோகத்தினை கணக்கிட்டு அபராதத்துடன் வசூலிக்கப்படுவர்.

சந்தானத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும், ஊடகங்களில் இருந்து இந்த விஷயத்தை தவிர்ப்பதற்காகவும் சந்தானத்தின் சார்பில் அபராதமாக ரூ.70,000/= மற்றும் சேர்மம் கட்டணம் ரூ.16,000/= செலுத்தப்பட்டது.

சந்தானத்தை போல் நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் வீட்டு உபயோக மின்சாரத்தை வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். சந்தானத்தின் மின்சார திருட்டு விஷயத்தை அறிந்த அந்த பிரபலங்கள், தாம் எப்போது சிக்குவோம் என்ற பயத்தில் வயிற்றில் புளியை கரைத்ததை போல் உள்ளனர். சிலர் தங்கள் அலுவலகத்திற்கு உபயோகப்படுத்தும் வீட்டு உபயோக மின்சாரம் எனில் அந்த இணைப்பை வர்த்தக இணைப்பாக மாற்ற உடனடி முயற்சி மேற்கொள்கின்றனர்.

சந்தானம் வீட்டில் அவர் அலுவலகம் வைத்துள்ளதை அறிந்த சென்னை மாநகராட்சியினர், சந்தானம் வீட்டுக்கு மற்றும் அவர் அலுவலகத்திற்கு என தனித்தனி வரி விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் மூலம் சொல்லப்படுகிறது.

பிரபலங்கள் மின்சார திருட்டை மனசாட்சியுடன் நிறுத்திகொண்டால் சரி. அடுத்து சிக்க போகும் பிரபலம் யார் என்று பார்ப்போம்.