எ பூமிகா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”. இந்த படத்தில் ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக மோனிகா சிங், இஷா ஆகியோர் நடிக்கிறார்கள். கஞ்சா கருப்பு, சென்ராயன், சிவசங்கர், கோபி மற்றும் ராஜுகனகாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜான், ஒளிப்பதிவு செய்து இயக்குபவர் ஸ்ரீகரபாபு.
படத்தை தயாரிக்கும் D.ரமேஷ்பாபு பிரபல நடிகைகள் பலருக்கு மேனேஜராக இருக்கிறார். சுனைனாவின் மேனேஜர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஹைதராபாத், சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. காமெடி திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் ஆர்யன் ராஜேஷ் – இஷா பங்கு பெற்ற க்ளாமர் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது.