பரிதாபங்களுக்காக உதவி செய்த ஆயிரக்கணக்கானோர்

‘பரிதாபங்கள்’ என்ற யூ-டியூப் சேனலின் மூலம் யூ-டியூப் தளத்தில் பிரபலமாக இருக்கும் கோபி – சுதாகர் கூட்டணி ஆசியாவிலேயே பெரிய கிரவுட் ஃபண்டிங் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, கிரவுட் ஃபண்டிங் முறைப்படி படம் எடுக்க களம் இறங்கிய ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் குழுவினர், தங்களது படத்திற்கு ‘ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா’என்று பெயரிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.கே இந்தப் படத்தை இயக்குகிறார்.

உலகெங்கிலும் இருந்து 28 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் இப்படத்தை தயாரிக்க, கிரவுட் ஃபண்டிங் முறையில் பணம் அனுப்பியுள்ளதாகவும், இதுவரை சுமார் 6.3 கோடி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக பணம் அளித்தவர்களுக்கென்று பிரத்யேக மொபைல் செயலி ஒன்றையும் உருவாக்கி இருந்தனர். அதில் படத்துக்கு ஆகும் செலவு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

“ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா” என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் (டிசம்பர் 15) நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி மற்றும் யூ-டியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a Response