அரசியல் கட்சிகளின் மிரட்டலை ஏற்க முடியாது, போலீஸ் பாதுகாப்புடன் படத்தை ரிலீஸ் செய்வோம் – ஜான் ஆபிரகாம்!

madras

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று கூறி அதற்கு தடை விதிக்குமாறு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுக ஆகியவை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில் படத்தை தயாரித்து, நடித்துள்ள ஜான் ஆபிரகாம் ஒரு பேட்டியில் கூறும்போது, “நான் ஒரு புதிய தயாரிப்பாளர். இதுவரை ஒரு படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ளேன் என்கின்றனர். மெட்ராஸ் கஃபே போன்ற படத்தை யாராவது எடுக்க வேண்டும். இது விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் படமோ, அல்லது எதிர்க்கும் படமோ இல்லை.

http://www.youtube.com/watch?v=3Rye8jjZJuA

கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது. வரும் காலத்திலும் இது போன்ற படங்களை எடுப்போம். இது போன்ற படங்களில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த ஜனநாயக நாட்டில் எனக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வோம்” என்றார்.