தினம் ஒரு பாடலாக வெளியாகும் ‘ராஜா ராணி’!

tamil-11x15-Aug21

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜா ராணி. ஷங்கர் உதவியாளர் அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஒரு பாடல் மட்டும் முன்னதாகவே சூரியன் FM-ல் இன்று வெளியானது. ஹே பேபி என்ற பாடல் தான் அது.

நாளை 20 ஆம் தேதி சூரியன் FM வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து மேலும் ஒரு பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். ‘சில்லென’ என தொடங்கும் அந்த பாடலும் நாளை முதல் FM-ல் ஒலிபரப்பாகிறது.