இளைஞர்களை தட்டி எழுப்பும் “பிரமுகர்”!

piramugar

 

ஸ்ரீ லட்சுமி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் வி.ஜே.என்டர்டெயின்மெண்ட்  சார்பாக எஸ்.மணிகண்டன், T.T.சுரேஷ் தயாரிக்கும் படம் “பிரமுகர்”. விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கிய JP. அழகர் மீண்டும் அதே ஆக்ரோஷ காட்சிகளாக இதில் பதிவு செய்துள்ளார். அரசியலை பாடமாக படித்த ஹீரோ, அரசியல் பதவியில் அமர்ந்து இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் சேவைக்காக போராடும் ஒரு ‘பிரமுகர்’-ன் கதைதான் இப்படம்.

ஒரு நாடு முன்னேறனும்னா பொது மக்களுக்கு போதுமான அரசியல் அறிவு வேணும்ங்கற கருத்தை வலியுறுத்தும் படம். ஜாதியும், மதமும் சம்பிரதாயத்துக்குள்ள மட்டும் தான் இருக்கணும், சட்ட திட்டங்களுக்குள்ள அது வரக் கூடாது என்பதையும் இக்கதை வலியுறுத்தும். வறுமையினால் பிறக்கும் புரட்சி தியாகத்துல ஜெயிக்கும் என்பதையும் படம் உணர்த்தும். வாழ்ந்து போராடினா பிரச்சனை முடியும், தற்கொலை பண்ணினா இனமே முடிஞ்சு போகும் என தமிழர்களின் தற்கொலை போராட்டத்துக்கு முடிவு கட்ட சொல்கிறது “பிரமுகர்”.

இளைஞர்களை தட்டி எழுப்பும் வலிமை மிக்க இக்கதை, காதல், ஒரு தேசிய பிரச்சனை அல்ல, அது தனி மனித உணர்வு என  இளைஞர்களுக்கு அறிவுறுத்தவும் செய்கிறது இப்படம்.

இதன் படப்பிடிப்பு தலக்கோணத்தில் 20 நாட்கள் நடந்தது. மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் 2 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்றோம். மழை பெய்து கொண்டிருந்ததால் பகலிலும் இரவாகவே இருந்தது. தொடர்ந்து பெய்த கடும் மழையால் பாம்புகளும், பல விஷ ஜந்துக்களும் எங்கள் கண் முன்னாலேயே சென்று கொண்டிருந்தன. அந்த நிலையிலும் ஹீரோ, ஹீரோயின் பயத்தை மனதில் மட்டுமே வைத்துக் கொண்டு நடித்தது திர்ல்லாக இருந்தது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதில் புது முகங்கள் திரிசூல், மோகனவேல், கர்ணா, மஞ்வா, T.T.சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு: ஹார்முக், இசை:  L.V.கணேசன். படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.