தேமுதிக தலைவர் மீதான பிடிவாரண்ட் ரத்து!

122249-vijaya முன்னதாக சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு வந்த விஜயகாந்த் பேட்டியின் போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த நவம்பர் 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் ஆஜராகவில்லை.

122249-vijaya
அவரது வழக்கறிஞர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் விஜயகாந்துக்கு உடல்நிலை சரி இல்லாததால் வரமுடிவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து வரும் டிசம்பர் 5ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

vijiஅவரது வழக்கறிஞர் ஆஜராகி விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை முடிக்க ஒத்துழைப்பு தராததால் விஜயகாந்துக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் மீதான பிடிவாரன்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response