மெட்ரோ ரயிலின் பிரச்சினைகளை அலசும் “மெட்ரோ”!

05.04 21

உலகின் நான்காவது போக்குவரத்தான மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பித்து சில நாடுகளில் 50 ஆண்டுகளைக் கடந்து விட்டது. லண்டன் 50 வருடங்கள், ஜப்பான் 30 வருடங்கள் என பல ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் இன்னமும் மக்கள் மனதில் மெட்ரோ ரயில் பற்றிய பயம் அந்தந்த நாட்டு மக்களை பயமுருதிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் மலிந்து விட்ட ஊழல் மிகப்பெரிய போக்குவரத்து சாதனமான மெட்ரோ ரயில் கட்டுமானத்திலும் ஊடுருவினால் என்ன ஆகும்? அதை படு த்ரில்லிங் காட்சிகளுடன் படமாக்கி இருக்கிறார்கள். விபத்துக்குள்ளாகும் மெட்ரோ ரயில் அதில் என்ன மாதிரியான பாதிப்புக்கள் என்பதை “மெட்ரோ” மூலம் படமாகி இருக்கிறார் இயக்குனர் ஆண்டன் மெகர்டிச்வ்.

செர்கே புஷ்கேபாலிஸ், அனா டோனிபிலியூ, அலெக்ஸி பர்ட்யூகோவ், கேத்ரினா ஆகியோர் நடிக்கிறார்கள். உலகம் முழுவதும் விரைவில் “மெட்ரோ” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது. இந்தியா முழுக்க “மெட்ரோ” படத்தை இண்டோ ஓவர்சீஸ் பில்ம்ஸ் பெரோஸ் இலியாஸ் வெளியிடுகிறார். உலகம் முழுக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது.