நட்புக்காக குரல் கொடுக்கும் இசையமைப்பாளர்கள்!

yuvan

“மங்காத்தா” படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் “பிரியாணி”. இது யுவன் சங்கர் ராஜாவின் 100- வது படம். K.E.ஞானவேல் ராஜா வழங்கும் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி மற்றும் பலர் நடித்து உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

இது யுவன் ஷங்கர் ராஜாவின் 100-வது படம் என்பதால் டி.இமான், ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன் இணைந்து ஒரு பாடல் பாடி அசத்தினார்கள். ‘திரும்பி வா…’ என்று கங்கை அமரன் எழுதிய இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் கலகலக்கும் என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.