‘யு’ கிடைத்தும் விஜய் படத்துக்கு சிக்கல்!

30955_541022502602025_397115869_n

விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் 9-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு ‘U/A’ செர்டிபிகட் கொடுக்கப்பட்டது. பின் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அது ‘U’ ஆக மாற்றப்பட்டது.

இதற்கிடையே விஜய்யின் ரசிகர் பட்டாளமும் தங்கள் சார்பில் ராட்சத கட் அவுட்களை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய தியேட்டர்களில் 9-ந்தேதி தலைவா வெளியாகிறது. ஆந்திராவிலும் முக்கிய தியேட்டர்களாக தேடி வந்தனர்.

ஆனால் ஆகஸ்ட் 7-ந்தேதி முன்னணி தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள அத்தாரிண்டிகி தாரீதி என்ற படம் வெளியாவதால் மொத்த தியேட்டர்களும் முடக்கப்பட்டு விட்டன.

அதனால் அவர் படம் திரைக்கு வருகிற அதே நாளில் தலைவாவை வெளியிட்டாலும் சிக்கல் என்பதால், அப்படம் ஓடி ஓரிரு வாரங்களுக்குப் பிறகு நல்ல தியேட்டர்கள் கிடைக்கிற போது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஆந்திராவில் தலைவா ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.