திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் பதவியேற்பு!

Music fuction (28)

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில்  இசையரசர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

விழாவில் இசையரசர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வெற்றி பெற்ற இசைக் கலைஞர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ், பாடகர் மனோ மற்றும் பெப்சி செயலாளர்  G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். பாடகி சின்மயி விழாவை தொகுத்து வழங்கினார்.

தலைவர் –  S.A.ராஜ்குமார்

செயலாளர்  –  டோம்னிக் சேவியர்

பொருளாளர்  –  V.R.சேகர்

ட்ரஸ்ட்  சேர்மன் – P.G.வெங்கடேஷ்

ட்ரஸ்ட்  செயலாளர் – D.சங்கரன்.

ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு  பதவியேற்றனர்.