பத்திரிகையாளர்களுக்கு எதிராக களம் இறங்கும் நன்றிகெட்ட ஜென்மங்களுக்கு கண்டனம்..!

வேலையில்லா பட்டதாரிகள் என்று சொல்வது மாதிரி நம் தமிழ்சினிமாவில் ரிட்டையர்டு கேசுகள் தான் ஒவ்வொரு சங்கத்திலும் உட்கார்ந்துகொண்டு தாங்கள் தான் எல்லாமே என்கிற நினைப்பில் ஆனைவரையும் ஆட்டிப்படைக்க நினைக்கின்றன..

இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் டி.சிவா.. ஒரு காலத்தில் தயாரிப்பாளராக இருந்து, தற்போது இயக்குனர்களாலும் நடிகர்களாலும் திரையுலகில் இருந்து வலுக்கட்டாயமாக வி.ஆர்.எஸ் கொடுக்கப்பட்டவர். ஆனாலும் திரையுலகை விட்டு போவேனா என்று தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளர் பதவியில் அமர்ந்துகொண்டிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் நம்ம அய்யா வேந்தர் டிவியில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். ஒரு படத்தை ஒழுங்காக தயாரிக்க தெரியாத இவருக்கு அங்கே என்ன பொறுப்பு தெரியுமா? படங்களை சேனல்களுக்கு வாங்கிக்கொடுப்பது தான்..

இப்போது இந்த அய்யாதான் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான ஒரு தீவிரமான வேலையில் இறங்கியிருக்கிறார். அதாவது இனிமேல் ஒவ்வொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் பத்து சேனல்கள் மற்றும் சில நாளிதழ்கள், வார இதழ்கள் மட்டும் தான் அழைக்கப்படுவார்களாம். இணையதள பத்திரிகைகளுக்கு அறவே அனுமதி இல்லையாம்..

இவர் இப்படிப்பட்ட செயல்களில் இறங்குவதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள புலிப்பார்வை படத்தை பத்திரிகையாளர்கள், குறிப்பாக இணையதளங்கள் கடுமையாக எதிர்த்ததுதான்.

அதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் இவர் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவருகிறாராம்.. அதாவது தமிழ்சினிமாவை சீரமைக்கப்போகிறாராம் இந்த சிற்பி.. ஊடகவியலாளர்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு தனக்குத்தானே ஆப்புவைத்துக்கொள்ளும் வேளைகளில் இறங்கியுள்ளார்.

இவரின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு சரத்குமார், ராதாரவி, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, தேனப்பன், ஏ.எல்.அழகப்பன் போன்ற ஒவ்வொரு சங்கத்திலும் இருக்கும் ரிட்டயர்டு ந(ம்)பர்களை துணைக்கு அழைத்திருக்கிறார் இந்த சிற்பி.. இதனால் பாதிக்கப்படப்போவது பல நல்ல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் தான்..

இந்த முட்டாள்தனமான செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளையிலிருந்து ஒரு மாதத்திற்கு சினிமா சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் நிரூபர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தால் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுக்க மாட்டார்கள்.

எதிர்காலத்தில் இந்தப்பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டாலும் கூட, இந்த இழி செயலில் இறங்கியுள்ள டி.சிவா மற்றும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகளின் புகைப்படமும் இனி எந்த ஊடகங்களிலும் வராது என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…

டி.சிவா என்கிற ஜெகஜால ஜித்தனின் வீழ்ச்சிக்கான கவுன்ட் டவுன் இன்றிலிருந்து ஸ்டார்ட் ஆகிவிட்டது..

IMG_3048

IMG_3050

IMG_3056

IMG_3057

IMG_3058

IMG_3066

IMG_3069

IMG_3070

IMG_3072

IMG_3073

IMG_3076

IMG_3080

IMG_3085

IMG_3090

IMG_3093

IMG_7986

IMG_7989