குள்ளநரி வேலை செய்யும் டி.சிவா சின்ன பட்ஜெட் படங்களை ஏன் வாங்குவதில்லை..?

வேந்தர் மூவிஸ் சார்பாக அந்த நிறுவனத்தில் படம் தயாரித்தாலும் அல்லது வேறு படங்களை வாங்கி வெளியிட்டாலும் அந்த வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு வேலைக்காரன் தான் டி.சிவா.. தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தாலும் வயிற்றுப்பாட்டை பார்க்கவேண்டும் அல்லவா.?

சரி..போய்த்தொலையட்டும்.. இப்போது சின்னபட்ஜெட் படங்களை பாதுகாக்கிறேன் என களம் இறங்கியிருக்கும் இந்த மகானுபாவன் தனது வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்காக பெரிய நடிகர்களின் படங்களையும், பெரிய இயக்குனர்களின் படங்களையும் வாங்குவதற்காக மட்டும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைவது ஏன்..?

ஏன்.. வெளிவரமுடியாமல் தவிக்கும் சின்ன பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடவேண்டியதுதானே.. சம்பாதிப்பது மட்டும் பெரிய பட்ஜெட் படங்களை வைத்து.. ஆனால் வாய் கிழிய பேசுவதோ சின்ன பட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று..

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வெண்ணைவெட்டி சிப்பாய் பட விழாக்களில் ஒரு சில ஊடகங்களைத்தவிர மற்றவர்களை அழைக்கக்கூடாது என புறக்கணிக்கப்போவதாக எடுத்துள்ள முடிவு.

இவருக்கென்ன எவனோ ஒருத்தன் சம்பளம் தருகிறான். கூசாமல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சீட்டில் அமர்ந்து நன்றாக தேய்த்துவிட்டு இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துவிடுவார். இதனால் பாதிக்கப்படபோவது சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் படத்தயாரிப்பாளர்கள் தான்.

நல்லதோ, கெட்டதோ ஊடகங்கள் இல்லையேல் அந்த படங்களுக்கு ஜனங்கள் மத்தியில் ஏது விளம்பரம்..? கோடிகளில் காசைப்போட்டு படம் எடுக்கும் இந்த சின்ன தயாரிப்பாளர்களின் கதி..? இவர்களுக்கு பதில் சொல்வாரா இந்த அய்யா..?

தன்னையும், தனது நிறுவனம் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தயாரித்த ‘புலிப்பார்வை’ என்ற படத்தையும் எதிர்த்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக, தனது சுயநலத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு எதிராக திரும்பியிருக்கும் சிவாவின் குள்ளநரித்தனம் தயாரிப்பளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏன் நடிகர்களுக்கும் கூட எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்..

தயாரிப்பாளர் சங்கம் இதை உணர்ந்து விழித்துக்கொண்டு இந்த குள்ளநரி டி.சிவாவை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தினால்தான் தற்போது களத்தில் இருக்கும் அல்லது அடுத்து வரும் தயாரிப்பளர்களை காப்பற்ற முடியும்.. விழித்துக்கொள்ளுங்கள் தயாரிப்பாளர்களே..