மைந்தன் – விமர்சனம்

மைந்தன் – விமர்சனம்

அநாதை இல்லம் நடத்துகிறோம் என்கிற பெயரில் குழந்தைகளை வெளிநாட்டுக்கு கடத்துகிறார்கள் சில கயவர்கள்.. அதில் இருந்து தப்பிவரும் ஒரு சிறுவன் மூலமாக இந்த விஷயம் ஹீரோ குமரேசனுக்கு தெரியவருகிறது.
எதிரிகளின் சதியை முறியடித்து, குமரேசன் அவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்..

மலேசியாவில் உருவான தமிழ்ப்படம் என்பதால் படம் நம்மிடம் இருந்து சற்று அந்நியப்பட்டுத்தான் நிற்கிறது. ஆனாலும் கதாநாயகன் சி.குமரேசன் என்கிற சி.கே நம்ம ஊர் எஸ்.ஜே.சூர்யா மாதிரி துறுதுறு என்று இருக்கிறார்,
அவருக்கு ஜோடியாக நடித்திருப்பதன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் புன்னகைப்பூ கீதா. சில காட்சிகளில் ஓரளவு நடிக்கவும் செய்கிறார்.

பிளாஸ்பேக்கில் வரும் இன்னொரு கதாநாயகி சலோனி நாயர் மிகப்பெரிய தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்திவிடவில்லை.. வந்துபோகிறார். அவ்வளவே.. வில்லனாக வரும் உதயகுமார், டார்க்கி இருவருமே அசத்துகிறார்கள். மொத்தத்தில் ஒரு மலேசிய தமிழ்ப்படம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக ஒருமுறை இந்தப்படத்திற்கு போய்வரலாம்.