மரியானை கண்டு கொள்ளவில்லையா ஆஸ்கார்??

mariyaan-first-look-poster_13645327090

பொதுவாக பெ‌ரிய ஹீரோக்கள் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்கள் தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகும். சமீபத்தில் கூட சூர்யா நடித்த சிங்கம் 2 தமிழில் வெளியான அதேநாள், ஆந்திராவிலும் யமுடு 2 என்ற பெய‌ரில் வெளியானது.

ஆனால் தனுஷ் நடித்த மரியான் படம் தமிழில் மட்டுமே வெளியானது. ம‌ரியானை பிற மொழிகளில் இதுவரை டப் செய்யவில்லை. ம‌ரியானுக்கும், தனுஷுக்கும் ஆந்திராவில் அவ்வளவாக மார்க்கெட் இல்லை என்பதால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். அதே நேரம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழில் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களை பிரமாண்டமாக விளம்பரப்படுத்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்போது மரியான் படத்தை ரிலீஸானால் போதும் என்பது போல் அதிக விளம்பரமில்லாமல் வெளியிட்டுள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ். தயாரிப்புக்கும், இயக்குனருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்குமோ? அல்லது ஏன் இந்த பாகுபாடு என்பது புரியாத புதிராகவே உள்ளது.