ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பாலிச்சா பகுதியில் உள்ள Instagram-இல் பகிரப்பட்ட ஒரு கணுக்கொள்ள முடியாத வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் செல்வதோடு, ஒரு நாயை சங்கிலியால் இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. வீடியோவில், நாய் சாலை மீது இழுத்துச் செல்லப்படுவதால் அதன் கால்களில் இரத்தம் வழிந்து காணப்படுகிறது. அந்த நாயின் ரத்தக்கறைகள் பார்ப்போரின் உள்ளத்தை பதறவைக்கின்றன.
இந்த பயங்கரமான சம்பவத்தை கண்ட பெண்மணி ஒருவர் உடனடியாக தலையீடு செய்து, அந்த நபரை வண்டியை நிறுத்தச் சொல்லி நேரில் எதிர்த்தார். “நீங்கள் பைத்தியமா? நீங்கள் ஒரு விலங்கா?” எனக் கடும் கோபத்துடன் கேட்டுக்கொள்வது வீடியோவில் கேட்கமுடிகிறது. இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பவத்தை பார்த்த பலரும் அந்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். “இந்த நபரையும் இப்படியே இழுத்துச் செல்லணும்” என்றும் பலர் குறி வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/DHarx-oxXxm/?igsh=eGN4enV0ejNyZHVl