உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார்.
இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்தோன் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சவுரப் லண்டனில் இருக்கும் நிலையில் அடிக்கடி இந்தியா வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக சௌரப்புக்கு தெரிய வந்தது.
இதன் காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகனை மட்டும் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகனின் எதிர்காலத்தை நினைத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அதோடு தன்னுடைய மனைவியையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் லண்டன் சென்ற அவர் கடந்த மாதம் தன்னுடைய மனைவி மற்றும் மகனின் பிறந்த நாளுக்காக இந்தியா வந்தார். அப்போது அவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து அந்த வாலிபருடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்டார்.
அவர்களுக்குள் நடந்த ஆபாசமான வாட்ஸ் அப் உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் முஸ்கான் தன்னுடைய கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 4ஆம் தேதி சவுரப்பை கொன்ற இருவரும், அவரது உடலை துண்டித்து, சிமெண்ட்மூடிய ட்ரம்மில் பதுக்கி வைத்துள்ளனர். மார்ச் 18ஆம் தேதி முஸ்கானின் குடும்பத்தினர் அந்த ட்ரம்மை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இருவரும் மார்ச் 19 அன்று கைது செய்யப்பட்டனர்.
மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் கட்டாரியா இந்த கொலைபற்றி கூறும் போது சவுரப்பின் உடல் இரண்டு வாரங்களுக்கு முன்பே கொல்லப்பட்டதாகவும், துளைக்கப்பட்ட தோல் மற்றும் நடுக்கமடைந்த பற்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிமெண்ட் ஊற்றுவதன் மூலம் உடலை எரிக்க முயன்றதாகவும், தனது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவைக்காலத்தில் இவ்வாறு கொடூரமாக நிகழ்ந்த கொலைக்கான தடயங்களை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 3 அன்று முஸ்கான், தனது கணவரின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பின்னர் தனது காதலனை அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து சவுரப்பை பலமுறை குத்தி கொன்றனர். பின் அவரது தலையை ரேசர் கத்தியால் வெட்டி, கைகளையும் உடல் உறுப்புகளாக துண்டித்தனர். உடலின் பெரும்பகுதியை முஸ்கான் படுக்கையடியில் வைத்திருப்பதோடு, சாஹில் தலை மற்றும் கைகளை தனி அறையில் வைத்திருந்தான். அடுத்த நாள், இருவரும் டிரம்ப் மற்றும் சிமெண்ட் வாங்கி, உடற்பாகங்களை அதில் வைத்து மூடியனர். தற்போது இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.