நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் விலகலா?

சீமானின் வலது கையாக இருக்கும் சாட்டை துரைமுருகன் அந்த கட்சியை விட்டு விலகி விட்டாரா என பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் அவர் அந்த பதிவை தன்னுடைய twitter பக்கத்தில் போட்டு ஒரு பொறுப்பை கூட ஒழுங்காக போடாமல் அப்படி என்னப்பா எடிட் பண்றீங்க என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்.

அதாவது கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி இல்லை எனவும் சீமான் தன்னை விட யாரும் உயரக்கூடாது என்று நினைப்பதாகவும் அடுத்தடுத்து நிர்வாகிகள் குற்றச்சாட்டினை முன்வைத்து ஏராளமானோர் விலகி வருகிறார்கள். சமீபத்தில் கூட 3000 நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர். கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சீமானுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் சாட்டை துரைமுருகனும் கட்சியிலிருந்து விலகி விட்டதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்பதை அவரே தெளிவு படுத்திவிட்டார்.

Leave a Response