நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள். அவருக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியை விலகுவார் என சமீப காலமாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார் காளியம்மாள்.
இந்நிலையில்தான், முன்னதாகவே காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில்தான், சரியாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அவர் நாதகவில் இருந்து விலகியது, இந்த கணிப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனால் அந்த விழாவில் அவர் தவெகவில் இணையவில்லை. தற்போது காளியம்மாள் தவெகவில் இணையாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில்தான், தவெக சார்பில் காளியம்மாளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப் போவதாகவும் வழங்கப்பட்டதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை கைக்கூடி வரும் சமயத்தில் நடுவில் புகுந்த திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி புகுந்து, அதனை தவிடுபொடியாக்கி காளியம்மாளை தூண்டில் போட்டு தூங்கிவிட்டதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியில் தனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த காளியம்மாளுக்கு, ஆளும் கட்சியான திமுகவில் இருந்து எம்பி சீட் வழங்கப்பட கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தவெக புதிய கட்சி என்பதால், அங்கு சென்றால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்திலும் திமுகவில் தனக்கென அங்கீகாரம் கிடைத்தால் அது தனது நீண்டகால அரசியல் வளர்ச்சி இருக்கும் என கணக்கு போட்ட காளியம்மாள் தவெகவின் டீலை ஓரம்கட்டிவிட்டு திமுகவுக்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்,விரைவில் காளியம்மாள் திமுகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.