பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை தரும் வரை சீமானை விட மாட்டோம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பற்றி அவதூறாக பேசினார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது சகோதரி மற்றும் பெற்ற தாய் மகள் ஆகியோருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு சொன்னதாக சீமான் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கும் பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறினார்.

இதன் காரணமாக தற்போது தமிழக பெரியார் திராவிட கழகத்தினர் சீமான் வீட்டை‌ முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சீமான் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமான் புதுச்சேரிக்கு கட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இன்று செல்ல இருக்கிறார். இதன் காரணமாக அங்கும் பெரியார் அமைப்பினர் சீமான் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, பெரியார் அப்படி பேசியதாக சீமான் சொன்னதற்கு கண்டிப்பாக ஆதாரத்தை காட்ட வேண்டும். அவர் ஆதாரத்தை தரும் வரை எங்கும் சீமானை நுழைய விடமாட்டோம். சீமான் தற்போது புதுச்சேரிக்கு செல்ல இருக்கும் நிலையில் அங்கும் அவரிடம் ஆதாரம் கேட்க தயாராக இருக்கிறார்கள். மேலும் பெரியார் பற்றி அவர் பேசியதற்கு ஆதாரத்தை தரும் வரை எங்கு சென்றாலும் அவரை விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Response