கயிறு கட்டி உயிரை காவு வாங்கிய போலீசார் : கேரளாவில் அதிர்ச்சி!

இரவு குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை மடக்கி நிறுத்துவதற்காக ரோட்டின் இருபுறமும் கயிறு கட்டி வைத்து, காவலுக்கு நின்றிருக்கிறார்கள் போக்குவரத்து போலீசார்.

கயிறு இருப்பதே தெரியாமல் சாலையில் டூ வீலரில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கயிறு தடுப்பில் சிக்கி தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

https://x.com/SiddharthKG7/status/1864544836168151110?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1864544836168151110%7Ctwgr%5E4d36afbe927e5ade04794b10fd254d439b09e7a4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

கயிற்றில் சிக்கி உயிரிழந்தவர் யார் என்று விசாரிக்கும் பொழுது அவர் க
28 வயதான மனோஜ் உன்னி என தெரிய வந்துள்ளது. மனோஜ் உன்னி தனது பைக்கில் இருந்து விழுந்ததை தான் அந்த வீடியோ காட்டுகிறது.

தனது தாயாருக்கு மருந்து வாங்கிவிட்டு வீடு திரும்பிய உன்னி, விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்த நிலையில், பலரும் கேரள போலீசாரை டேக் செய்து கண்டனங்களைக் குவித்து வருகின்றனர்.

ஆனால் பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகன சோதனைக்காக கயிறு கட்டப்பட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்படுகிறது

மேலும் அந்த இளைஞர் படுவேகத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கான காரணம் என்று வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் போலீசார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இதுவரை மனித உரிமை மீறல் சங்கங்கள் எதுவும் குரல் கொடுக்கவில்லை. 100 சதவீத படித்தவர்கள் இருக்கும் மாநிலம் என்று காம்ரேட்கள் பந்தா செய்யும் மாநிலத்தில் இப்படியானதொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Response