தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக சமூக நீதி என்று பேசும் திமுக மக்களுக்காக எந்த நல்லதையும் செய்யவில்லை என்றார். அதன்பிறகு திமுக கட்சி கூட்டணியில் மட்டும் தான் நம்பி உள்ளது எனவும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுக கூட்டணி உடைய வேண்டும் தேர்தலில் மக்கள் தி.மு.காவை மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றும் கூறினார். இதற்கு தற்போது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, சினிமாவில் விஜய் மைனஸ் ஆனதால் தான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம். தொழில் தகராறு மற்றும் தொழில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அவர் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அந்த கட்சி எல்லாம் உருப்படுமா. நான் இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். அவர் கட்சிக்காகவோ அல்லது மக்களுக்காகவோ அரசியலுக்கும் வரவில்லை. மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் மட்டும்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்று கூறினார்.