திமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அதன் பிறகு திமுக மற்றும் பாஜக தவிர பிற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை விமர்சிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் திமுக மற்றும் பாஜகவை விமர்சிக்கும் நிலையில் அதிமுகவை மட்டும் அவர் விமர்சிக்கவில்லை. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஒரே ஒரு கட்சி அதிமுக தான் என்றும் அதனால் விஜய் எப்படி எங்கள் கட்சியை விமர்சிக்க முடியும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அறிவிப்புகள் தேர்தல் சமயத்தில் முறையாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.